நாடு முழுவதும் வீட்டு உபயோகத்துக்கும், வணிக பயன்பாட்டுக்கும் என 2 வகையான சிலிண்டர்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அதன்படி சிலிண்டர் வீட்டு உபயோகத்திற்கு 14.2 கிலோ எடையிலும், வணிக பயன்பாட்டுக்கும் 19 கிலோ எடையிலும் விற்பனையாகிறது.
இந்த சிலிண்டர்களின் விலையை சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலைக்கேற்ப பெட்ரோலியம் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன.
பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் தினசரி மாற்றி வருகின்ற நிலையில், சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை மாதத்திற்கு இரு முறை மாற்றி அமைக்கப்படுகின்றன.
அதன்படி சென்னையில் வீட்டு உபயோகத்திற்கு பயன்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அதிகரித்துள்ளது. அந்த வகையில் ஒரு சிலிண்டரின் விலை ரூ.50 உயர்ந்து, ரூ.1118.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ரூ.1,068-க்கு விற்பனையான நிலையில் இன்று ரூ.50 அதிகரித்துள்ளது.
அதேபோல வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.223 உயர்ந்து ரூ.2,268-க்கு விற்பனை செய்யப்படுகிறது.