வீட்டுக் கடன்கள் உள்ளிட்ட பல்வேறு நிதிச் சேவைகளை தபால் அலுவலகங்கள் வாயிலாக வழங்கும் நோக்கில் HDFC நிறுவனத்துடன் இந்தியா போஸ்ட் பேமண்ட்ஸ் வங்கி கூட்டணி அமைத்துள்ளது என தெரிவிக்ககப்பட்டுள்ளது.
தபால் அலுவலகங்கள் அஞ்சல் சேவை மட்டுமல்லாமல் பல்வேறு நிதிச் சேவைகளையும் வழங்கி வருகின்றன. டெபாசிட், சிறு சேமிப்புத் திட்டங்கள், சேமிப்பு என பல்வேறு நிதிச் சேவைகளை தபால் அலுவலகங்கள் வாயிலாகப் பெற முடியும். இதற்கு அடுத்தக்கட்டமாக, முழு வீச்சில் நிதிச் சேவைகளை வழங்க இந்தியா போஸ்ட் பேமண்ட்ஸ் வங்கியும் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், வாடிக்கையாளர்களுக்கு வீட்டுக் கடன்கள் உள்ளிட்ட பல்வேறு நிதிச் சேவைகளை தபால் அலுவலகங்கள் வாயிலாக இலகுவாக வழங்கும் நோக்கில், HDFC நிறுவனத்துடன் இந்தியா போஸ்ட் பேமண்ட்ஸ் வங்கி கூட்டணி அமைத்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 4.7 கோடி வாடிக்கையாளர்களுக்கு வீட்டுக் கடன்கள் உள்ளிட்ட பல்வேறு நிதிச் சேவைகளை வழங்க இந்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் கிராமப்புறங்களில் உள்ள மக்களும் தபால் அலுவலகங்கள் வாயிலாக வீட்டுக் கடன் பெற முடியும் என்றும் இத்திட்டம் மக்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக அமையும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.