ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் (Houthi rebels) மீது அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட 10 நாடுகளின் கூட்டுப்படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இஸ்ரேல்-ஹமாஸ் இயக்கத்தினர் இடையே போர் நடைபெற்று வருகிறது. முன்னதாக காசா முனையில் இருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தியது. இதில் இஸ்ரேலியர்கள் பலர் காயமடைந்தனர்.
இதற்கு பதிலடியாக காசா முனை மீது இஸ்ரேல் ராணுவம் பதில் தாக்குதல் நடத்தியது. இதனை அடுத்து இரு தரப்பும் மாறி மாறி ஏவுகணைத் தாக்குதலை நடத்தி வருகிறது.
இந்த போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவுக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அதன் எதிரொலியாக செங்கடலில் பயணிக்கும் இஸ்ரேல் ஆதரவு நாடுகளில் இருந்து வரும் சரக்கு கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தொடர் தாக்குதலில் ஈடுபடுகிறார்கள்.
இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட 10 நாடுகளின் கூட்டுப்படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
போர் விமானங்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் மூலம் ஏமனில் உள்ள ஹவுதி படையினர் மீதும் தாக்குதல் நடைபெற்று வருகிறது. ஏமன் நாட்டின் சனா விமான நிலையம், அல் ஹூதைதா, சத்தா, தாமர் ஆகிய நகரங்களில் உள்ள ஹவுதி நிலைகளைக் குறி வைத்து 10 நாடுகளின் கூட்டுப்படைகள் தாக்குதல் நடத்தின.
ஏமன் மீதான தாக்குதல் குறித்து அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட 10 நாடுகள் விளக்கம் அளித்துள்ளது.
அந்நாடுகள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், “செங்கடலில் சரக்குக் கப்பல்கள் மீது ஏமன் படைகள் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடி கொடுத்து வருகிறோம்.
சரக்கு கப்பல்களை வழிமறித்து ஹவுதி படையினர் (Houthi rebels) தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
சர்வதேச அமைப்புகளின் தொடர்ச்சியான எச்சரிக்கையை மீறி ஏமன் தாக்குதல் நடத்தியதால் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.

ஹவுதி படைகள் நவம்பரில் இருந்து சரக்குக் கப்பல்கள் மீது நடத்திய தாக்குதல்கள் கவலையளிக்கிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.
https://x.com/ITamilTVNews/status/1745748477060219273?s=20
இதற்கிடையே தேவைப்பட்டால் தாக்குதலை மேலும் தீவிரப்படுத்துவோம் எனவும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவின் இந்த தாக்குதலால் காசாவில் நடக்கும் போர் தீவிரமடையும் எனவும் அஞ்சப்படுகிறது.