பேருந்து இயக்கத்தை தடை செய்யும் வகையில் முற்றுகையிடவோ (huge strike) சிறை பிடிக்கவோ முயன்றால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 1.30 லட்சம் போக்குவரத்து தொழிலாளர்கள் பணியாற்றுகிறார்கள்.
இந்நிலையில் இவர்களுக்கான கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 8 ஆண்டுகளாக பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வந்திருக்கின்றன. ஆனால் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.
இதனை அடுத்து தமிழ்நாடு முழுவதும் பல்வேறு போக்குவரத்து தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.
பல்வேறு போக்குவரத்து சங்கங்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து கடந்த 9ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.
அண்ணா தொழிற்சங்க பேரவை முன்னின்று நடத்தி வரும் இந்த போராட்டத்திற்கு AITUC, CITU உள்ளிட்ட சங்கங்கள் ஆதரவு வழங்கி உள்ளன.
இந்த நிலையில் போராட்டத்தில் பங்கேற்காத தொழிற்சங்களை ஒருங்கிணைத்த போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், அவர்கள் மூலம் தமிழ் நாட்டில் பேருந்துகளை இயக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
போக்குவரத்து ஊழியர்கள் நடத்தும் போராட்டத்தில் (huge strike) பங்கேற்காது என திமுக ஆதரவு தொழிற்சங்கமான ஐ.என்.டி.யூ.சி தொழிற்சங்கத்தின் முதன்மை பொதுச்செயலாளர் நாராயணசாமி அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.
பெரும்பாலான உறுப்பினர்களை கொண்ட தொழிற்சங்கத்தின் மூலம் பெரும்பாலான இடங்களில் 80 சதவிகிதம் வரை பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்த நிலையில், வேறு சங்கங்கள் இயக்கம் பேருந்துகளை அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் மறித்து நேற்று போராட்டம் செய்ய முயன்றனர்.
இதையும் படியுங்க : https://itamiltv.com/woman-to-break-32-year-long-maun-vrat-after-ramar-temple-inauguration/
இதனை அடுத்து பேருந்து இயக்கத்தை தடை செய்யும் வகையில் முற்றுகையிடவோ சிறை பிடிக்கவோ முயன்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். எந்த பாரபட்சமும் இன்றி துறை சார்பில் ஒழுங்கு நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படும்.
2வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து தொழிற்சங்கங்கள். பணிமனைகள், பேருந்து நிலையங்களை முற்றுகையிட தொழிற்சங்கத்தினர் திட்டமிட்டுள்ள நிலையில், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை விடுத்தார்.
https://x.com/ITamilTVNews/status/1744955169895518593?s=20
இது போக கடைசியாக தனியார் நிறுவன டிரைவர், ஆம்னி பேருந்து டிரைவர்கள் ஆகியோரை வைத்து பேருந்துகளை இயக்கம் பணிகளை தமிழ்நாடு போக்குவரத்து துறை மேற்கொண்டு வருகிறது.