ஜார்க்கண்ட்டில் இன்று அதிகாலை ஹவுரா – மும்பை விரைவு ரயில் தடம் புரண்டு ஏற்பட்ட விபத்தில் 2 பேர் பரிதாபகமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஹவுரா – மும்பை செல்லும் விரைவு ரயில் சென்றுகொண்டிருந்த போது சக்கரதர்பூர் அருகே திடீரென ரயில் தடம் புரண்டு விபத்தில் சிக்கி உள்ளது .
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு குழுவினர் ரயிலுக்குள் சிக்கி இருந்த பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர் .
Also Read : வயநாட்டில் அடுத்தடுத்து 2 நிலச்சரிவுகள்
இதையடுத்து மீட்பு பணியில் ஈடுபட்டிருக்கும் மீட்பு குழு வெளியிட்டுள்ள முதற்கட்ட தகவலில் இந்த ரயில் விபத்தில் தற்போது 2 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 6 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும் ஜார்க்கண்ட்டில் ஹவுரா – மும்பை விரைவு ரயில் தடம் புரண்ட விபத்தில் 80% பயணிகள் அருகில் உள்ள சக்கரதர்பூர் ரயில் நிலையத்திற்கு பேருந்துகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ளோரை மீட்க ரயில் ஒன்று சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் இந்திய ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.