ஹ்ரித்திக் ரோஷன் நடிப்பில் உருவாகியுள்ள Fighter படத்தின் டீசர் வெளியாகி செம வைரல் ஆகி வருகிறது.
பாலிவுட் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான ஹ்ரித்திக் ரோஷன், தீபிகா படுகோன், அனில் கபூர் ஆகியோர் நடிப்பில் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ஃபைட்டர் . அடுத்த ஆண்டு ஜனவரி 25ம் தேதி குடியரசு தினத்தன்று வெளியாக உள்ள இப்படத்தின் மீது ரசிகரக்ள் மீது ஏகபோக எதிர்பார்ப்பு உள்ளது.
இந்நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் இப்படத்தின் டீசர் வெளியாகி தற்போது செம வைரல் ஆகி வருகிறது.
ஆக்சன் காட்சிகளுக்கு பஞ்சமில்லாமல் நிறைந்திருக்கும் இந்த டீசரில் குட்டி ரொமான்டிக் கட்சிகளும் எட்டிப்பார்க்கின்றன.பிரம்மாண்ட பொருட் செலவில் உருவாகியுள்ள இப்படம் நிச்சயம் ஹாலிவுட் படங்களுக்கு இணையாக நின்று 1000 கோடி வசூலை தாண்டும் எதிர்பார்க்கப்படுகிறது.
டீசர் இப்படி என்றால் இன்னும் ட்ரைலர் மற்றும் ஸ்னீக் பீக் காட்சிகளில் இன்னும் என்னவெல்லாம் வரப்போகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.