கணவன் பேச்சை மீறிய மனைவியால் கணவன் எடுத்த முடிவு

Husbands-outrageous-decision-by-his-wife-who-violated-the-word
Husbands outrageous decision by his wife who violated the word

கணவன் பேச்சை மீறி உறவினர் நிகழ்ச்சிக்கு மனைவி சென்றதால் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்

சென்னை மதுரவாயல், சக்கரபாணி நகர், 14வது தெருவைச் சேர்ந்தவர் சந்திரசேகர். 31 வயதான இவருக்கு ரம்யா என்ற மனைவியும் இரண்டு பிள்ளைகளும் உள்ளனர்.
இந்நிலையில், நேற்று அரக்கோணத்தில் உள்ள ரம்யாவின் உறவினரின் வீட்டில் நடந்த காரிய நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டும் என மனைவி ரம்யா கணவரிடம் கேட்துள்ளார். இதற்கு கணவர் மறுப்புத் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

ஆனால், கணவரின் பேச்சை மீறிய ரம்யா, குழந்தைகளை அழைத்துக் கொண்டு அரக்கோணத்திற்கு சென்றுள்ளார். இதனால் மன உளைச்சல் அடைந்த சந்திரசேகர் மது போதையில் வீட்டிலேயே இருந்துள்ளார்.

Husbands outrageous decision by his wife who violated the word

இரவு நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகமடைந்து அக்கம், பக்கத்தினர் பார்த்தபோது சந்திரசேகர் தூக்கிட்டு இறந்த நிலையில் இருப்பதைக் கண்டு காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர.
இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மதுரவாயல் காவல்துறையினர் உயிரிழந்த சந்திரசேகரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Total
0
Shares
Related Posts