நான் யாரை எதிரியாக பார்க்கின்றேனோ அவர்கள்தான் எனக்கு எதிரி, என்னை எதிர்ப்பதால் அவர்களுக்கு ஒரு அடையாளம். நான் ஒரு புலி பூனையுடன் என்னால் சண்டை போட முடியுமா என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசியல் களத்தில் தற்போது பரபரப்பாக பேசப்படும் விவகாரங்களில் ஒன்று தான் சீமான் வீரலட்சுமி விவகாரம் . பல வருடங்களுக்கு முன் சீமான் தன்னை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றி விட்டதாக நடிகை விஜயலட்சுமி கடந்த ஆகஸ்ட் மாதம் போலீசில் புகார் அளித்தார்.
இதனால் நடிகை விஜயலக்ஷ்மிக்கு மிரட்டல்கள் வர அவருக்கு பக்கபலமாக தமிழர் முன்னேற்ற படையின் தலைவர் வீரலட்சுமி செயல்பட்டார். விஜயலட்சுமி வீர லட்சுமி சீமான் ஆகியோரின் பகை நாளுக்கு நாள் வளர தீடிரென கடந்த 16ஆம் தேதி நடிகை விஜயலட்சுமி சீமான் மீதான புகாரை திரும்ப பெற்றார்.
இதையடுத்து தற்போது வீர லட்சுமி மற்றும் சீமான் ஆகியோர் மத்தியில் கடுமையான வாய் போர் நிலவி வருகிறது . ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த வீர லட்சுமி என் கணவருடன் பாக்ஸிங் செய்ய வாங்க என சீமானுக்கு அழைப்பு விட்டுள்ள நிலையில் தற்போது சீமான் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான் கூறியதாவது :
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் கொண்டுவரப்பட்ட மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு பதிலாக கிராமப்புற பெண்களுக்கு ஆடு, மாடு வளர்த்தல் மற்றும் நகர்ப்புற பெண்களுக்கு ஊறுகாய் போட சொல்லி கொடுக்க வேண்டும்.
நான் யாரை எதிர்க்கின்றேனோ அவர்கள்தான் எனக்கு எதிரி, என்னை எதிர்ப்பதால் அவர்களுக்கு ஒரு அடையாளம் கிடைக்கிறது பூனை சண்டைக்கு கூப்பிட்டால் புலி போகுமா? நான் ஒரு புலி பூனையுடன் என்னால் சண்டை போட முடியுமா..? என சீமான் தெரிவித்துள்ளார்.