இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக இருந்த உதயநிதி ஸ்டாலின் இன்று மாலை தமிழ்நாடு அரசின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள நிலையில் அவர் மீது ஏராளமான விமர்சனங்கள் எழுந்து வருவதால் தன் மீதான விமர்சனங்களுக்கு தனது பணியின் மூலம் பதிலளிப்பேன் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள உதயநிதி ஸ்டாலின் ஆளுநர் மாளிகையில் இன்று மாலை முறையாக பொறுப்பேற்க உள்ள நிலையில் முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா மற்றும் கருணாநிதி ஆகியோரின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
Also Read : நேபாளத்தை புரட்டிப்போட்ட பெருவெள்ளம் – பலி எண்ணிக்கை 66 ஆக உயர்வு..!!
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி கூறியதாவது :
துணை முதலமைச்சர் என்பது பதவியல்ல. பொறுப்பு என்பதை உணர்ந்து செயல்படுவேன். எனக்கு வாழ்த்து கூறுபவர்களுக்கு நன்றி. என்னை விமர்சித்தவர்களுக்கு எனது பணியின் மூலம் பதிலளிப்பேன் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.