டெஸ்ட் கிரிக்கெட்டின் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை (ICC test) பட்டியலில் இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரராக வலம் வரும் குட்டிப்புலி ஜெய்ஸ்வால் 12வது முன்னேறி அசத்தியுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி என்று அழைக்கப்படும் இன்டர்நேஷனல் கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது.

இதில் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக மாறி வரும் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 3 இடங்கள் முன்னேறி தற்போது 12வது இடத்தை தனது திறமையால் எட்டிப்பிடித்துள்ளார் .
Also Read : https://itamiltv.com/jarkahand-train-accident-made-india-cry/
இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-வது மற்றும் 3-வது டெஸ்ட் போட்டியில் அபாரமாக ஆடிய ஜெய்ஸ்வால் இரட்டை சதங்கள் விளாசியதன் மூலம் தஹ்ரபோது தரவரிசையில் மின்னல் வேகத்தில் ஏற்றம் கண்டுள்ளார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் டெஸ்ட் தொடர் ஆரம்பிக்கும் முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட்டில் 69 ஆவது இடத்தில் இருந்த ஜெய்ஸ்வால் அந்த தொடருக்கும் பின் தற்போது 12வது இடத்தை அடைந்துள்ளார்.

இதேபோல் பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசை (ICC test) பட்டியலில் இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் 2-வது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார்.