11 ஆண்டுகளுக்குப் பின் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக விளையாடுவதற்காக பாகிஸ்தான் அணி சென்னை வந்துள்ளது.
சென்னையில் அக்.23 ம் தேதி ஆப்கானிஸ்தான் அணியை பாகிஸ்தான் எதிர்கொள்கிறது.
இதற்காக ஒருவாரம் சென்னையில் தங்கவுள்ள பாகிஸ்தான் வீரர்கள் சில மணிநேரங்கள் முன்பு சென்னை விமான நிலையம் வந்தனர்.
விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பாகிஸ்தான் வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதற்கு முன்னதாக, 2012ம் ஆண்டு சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின. அப்போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.
இது வரை உலகக் கோப்பை தொடரில் இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடியுள்ள பாகிஸ்தான் அணி இரண்டில் வெற்றியும், இரண்டில் தோல்வியும் அடைந்துள்ளது.