இந்திய தொழில்துறை மேம்பாட்டு வங்கி (IDBI) Executive பணியிடங்களை (recruitment) நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பின் படி, காலியாக உள்ள 1036 பணியிடங்களுக்கு (recruitment) ஆர்வமுள்ளவர்கள் 24.04.2023 முதல் 07.06.2023 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்களுக்கான வயது வரம்பு 20 முதல் 25 க்குள் இருக்க வேண்டும். அதாவது மே 2, 1998 முதல் மே 1, 2003க்குள் பிறந்தவர்களாக இருக்க வேண்டும் எனவும்
விண்ணப்பதாரர்கள் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து எதாவது ஒரு துறையில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பள விவரம்:
முதல் வருடம் – ரூ.29,000/-
இரண்டாம் வருடம் – ரூ.31,000/-
மூன்றாம் வருடம் – ரூ.34,000/- வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வங்கி பணிக்கான 3 தேர்வு செயல்முறைகள்:
01.Online Test (OT) – ஆன்லைன் சோதனை.
02.Document Verification (DV) – ஆவண சரிபார்ப்பு.
03.Pre Recruitment Medical Test (PRMT) – ஆட்சேர்ப்புக்கு முந்தைய மருத்துவ சோதனை.
எவ்வாறு விண்ணப்பிப்பது?
step 1: முதலில், IDBI இன் அதிகாரப்பூர்வ வலைத்தள பக்கமான @idbibank.in என்ற லிங்க்கை கிளிக் செய்ய வேண்டும்.
step 2: முகப்புப் பக்கத்தில், Careers >> Current Openings என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
step 3: “Recruitment of Executive 2023-24” என்ற அறிவிப்பை கிளிக் செய்ய வேண்டும்.
step 4: பின்னர், “Apply Online” என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
step 5: விண்ணப்பப் படிவத்தில் உங்கள் தனிப்பட்ட மற்றும் கல்வி விவரங்களை சரியாக உள்ளீடு செய்ய வேண்டும்.
step 6: விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிக்க விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.
step 7: கடைசியாக விண்ணப்பத்தை சமர்ப்பித்து பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.