அம்பேத்கர் உயிரோடு இருந்திருந்தால் ஹிஜாப் தீர்ப்பு கேட்டு அழுதிருப்பார்” என கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய அனுமதி கேட்டு வழக்கு தொடர்ந்த மாணவிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
கல்வி வளாகங்களில் ஹிஜாப் அணிவது குறித்து இன்று கர்நாடகா உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பு குறித்து பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பேசிய மாணவிகள்;
`அம்பேத்கர் உயிரோடு இருந்திருந்தால் ஹிஜாப் தீர்ப்பு கேட்டு அழுதிருப்பார் மதம் முக்கியமா கல்வி முக்கியமா என கேட்கும் நீங்கள், அரசிடம் கல்வி முக்கியமா? சீருடை முக்கியமா என்று கேளுங்கள். எங்களை படிக்காதவர்கள் ஆக்க முயற்சிக்கிறார்கள். அரசியலமைப்பு மத உரிமையை கடைபிடிக்க அனுமதி அளித்து இருக்கிறது” என மாணவிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதனிடையே ஹிஜாப் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவிருப்பதாக மாணவிகளின் வழக்கறிஞர் அனஸ் தன்வீர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.