திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் வட்டத்திற்குட்பட்ட அரிச்சந்திரபுரம் ஊராட்சியில் உள்ள இளமங்கலம் என்கிற சிற்றூரில் ஆனந்த விநாயகர் (Ananda Vinayagar) ஆலயம் அமைந்துள்ளது.
இந்த ஆலயத்தின் குடமுழுக்கு திருவிழா இன்று நடைபெற்றது இதில் இளமங்கலம் அரிச்சந்திரபுரம் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்,
இந்த ஆலயத்தின் குடமுழுக்கு திருவிழா கடந்த 22 ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. தொடர்து அடுத்த நாள் கணபதி ஹோமம் லட்சுமி ஹோமம் உள்ளிட்ட பூர்வாங்க பூஜைகள் நடைபெற்றன.அதனைத் தொடர்ந்து முதல் கால யாக பூஜை தொடங்கி பூர்ணாஹதி நடைபெற்றது.
இந்தநிலையில் முக்கிய நிகழ்வான குடமுழுக்கு விழாவான இன்று காலை இரண்டாம் கால யாக பூஜை தொடங்கி பூர்ணாஹுதி நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து கடப் புறப்பாடு நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் கடங்களை தலையில் சுமந்தபடி ஆலயத்தை ஆலயத்தை வலம் வந்த பின்பு விமான கலசத்திற்கு புனித நீரால் குடமுழுக்கு செய்து வைத்தனர்.மேலும் அந்த புனித நீர் சுற்றி இருந்த பக்தர்கள் மீதும் தெளிக்கப்பட்டது.
தொடர்ந்து (Ananda Vinayagar) ஆலயத்திற்கு வந்திருந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்ப்பாடுகளை தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வம் மற்றும் கிராமவாசிகள் ஏற்ப்பாடு செய்திருந்தனர்