இளையராஜாவின் அன்பு மகளும் பிரபல பின்னணி பாடகியான bhavatharini இலங்கையில் நேற்று மாலை உயிரிழந்துள்ளார் .
புற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த பவதாரிணி நெடு நீண்ட நாட்களாக மருத்துவ சிகிச்சை பெற்று வந்தாக கூறப்படுகிறது .
இதையடுத்து ஆயுர்வேத மருத்துவ சிகிச்சைக்காக இந்தியாவின் பக்கத்துக்கு நாடான இலங்கைக்கு சென்றிருந்தார். அங்கேயே தங்கி தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி அவர் உயிரிழந்துள்ளார் .
47 வயதாகும் பவதாரணி 5 மாதங்களாக கடுமையான உடல் நல பிரச்சனையில் இருந்ததாகவும் ஆங்கில மருந்துகள் உதவவில்லை என்பதால் இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை மேற்கொண்டு வந்ததாக கூறப்படுகின்றது.
மருத்துவர்களை எவ்ளோவோ முயன்றும் சிகிச்சை பலன் இன்றி நேற்று மாலை 5:20 மணிக்கு அவர் மரணம் அடைந்துள்ளார் .
இதையடுத்து இன்று மாலை அவரது உடல் சென்னைக்கு கொண்டு வரப்பட உள்ளது . இசை நிகச்சிக்காக இளையாராஜா ஏற்கனவே இலங்கைக்கு சென்றுள்ள நிலையில் தற்போது குடும்பத்தினரும் அங்கும் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
இளையாராஜா இசையில் பாரதி என்ற படத்தில் ‘மயில் போல’ பாடலுக்கு பவதாரணிக்கு சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருது கிடைத்தது .
இதையடுத்து இளையராஜா, கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா உள்ளிட்டோர் இசையமைப்பில் ஏராளமான பாடல்களை bhavatharini பாடியுள்ளார். அதனை பாடல்களும் ஹிட்டு தான்.
தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, கன்னட மொழிகளிலும் பவதாரணி பல்வேறு திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
இசையில் தனது குடும்பத்தினரை போல் மென்மேலும் பல சாதனைகளை பவதாரணி படைப்பார் என்று ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் அவரின் மரணம் நேற்று நிகழ்ந்துள்ளது.
Also Read : https://itamiltv.com/author/bhoobalan/
இளம் வயதிலேயே தேசி விருது பெற்ற பாடகி பவதாரணியின் மரணம் அவரது குடும்பத்தை மட்டுமின்றி ஒட்டுமொத்த திரையுலகையும் சோக கடலில் மூழ்கடித்துள்ளது.
தனது அன்பு மகளை இழந்து துடிக்கும் இசைஞானி இளையராஜா அவர்களுக்கும், பவதாரணியின் சகோதரர்கள் யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா உள்ளிட்ட குடும்பத்தினருக்கும் .
திரையுலகினர் ரசிகர்கள் அரசியல் தலைவர்கள் என பலரும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் வருகின்றனர்.