லியோ படத்தை இணையதளங்களில் வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள லியோ திரைப்படத்தில் திரிஷா, கௌதம் வாசுதேவ் மேனன், அர்ஜூன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான் ,சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
அனிருத் இசை அமைத்துள்ள இந்த படத்தை செவன் ஸ்கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. லியோ திரைப்படம் நாளை மறுநாள் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்த திரைப்படத்தை நாளை முதல் 24-ந்தேதி வரை காலை 9 மணி முதல் நள்ளிரவு 1.30 மணி வரை 5 காட்சிகள் திரையிட தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி அரசாணை பிறப்பித்துள்ளது.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி போன்ற மொழிகளில் வெளியாகவுள்ள, இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த திரைப்படத்தை நாளை முதல் 24-ந்தேதி வரை காலை 9 மணி முதல் நள்ளிரவு 1.30 மணி வரை 5 காட்சிகள் திரையிட தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி அரசாணை பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் லியோ படத்தை இணையதளத்தில் வெளியிட தடை விதிக்குமாறு படத்தின் தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தது. இதனை விசாரித்த நீதிபதிகள் லியோ படத்தை 1246 இணையதளங்களில் வெளியிட தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.