தமிழகத்தில் 12 பொதுத்தேர்வில் (plus 2 examination) தமிழ் மொழி தேர்வை 50 ஆயிரத்து 674 பேர் எழுதவில்லை என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
2022 – 2023 கல்வி ஆண்டுக்கான பொது தேர்வுகள் இம்மாதம் தொடங்க இருக்கும் நிலையில், 12 மாணவ-மாணவிகளுக்கு பொது தேர்வு (plus 2 examination) இன்று தொடங்கியது.
இந்நிலையில், தேர்வுகளை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பள்ளி மாணவர்களாக 8,51,303 மாணவ-மாணவிகளும், தனி தேர்வுகளாக 23,747 மாணவர்களும் என மொத்தம் 8,75,050 பேர் தேர்வு எழுத இருக்கின்றனர்.
இந்நிலையில், சென்னையில் மட்டும் 45 பள்ளிகளில் இருந்து 45,982 மாணவ மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர். மேலும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 3,225 இடங்களில் இதற்கான தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
இதனை அடுத்து தமிழகத்தில் 12 பொதுத்தேர்வான தமிழ் மொழி தேர்வை 50 ஆயிரத்து 674 பேர் எழுதவில்லை என பள்ளிக்கல்வித்துறை தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று தொடங்கிய பிளஸ் 2 பொது தேர்வு 50,674 மாணவ-மாணவிகள் எழுதவில்லை என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும், பள்ளிகளை சேர்ந்த 8,51,303 மாணவ மாணவிகளில் 49 ஆயிரத்து 559 பேர் இன்று 12 பொதுத்தேர்வு எழுத வரவில்லை எனவும் பள்ளிக்கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 12 தமிழ் முதல் தாள் தேர்வை எழுதும் தனித் தேர்வர்கள் 1,115 பேரும் எதேர்வு ழுத வரவில்லை எனவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.