கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு(senthilbalaji )சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொண்ட சீல் வைத்த நிலையில் தற்பொழுது மீண்டும் சீலை பிரித்து சோதனை ஆரம்பமாகி உள்ளதால் கரூரில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
கரூரில் கடந்த மே 26 ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்க்கொண்டது.
அமைச்சர் செந்தில் பாலாஜி என் தம்பி அசோக் குமார், கொங்கு மெஸ் உணவகத்தின் உரிமையாளர் மணி உள்ளிட்டோருக்கு தொடர்புடைய இடங்களில் சுமார் 8 நாட்களுக்கு மேலாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டன.
இதில் சுமார் 5 உங்களுக்கு வருமானவரித்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் இந்த சோதனைகள் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகவும் தகவல் வெளியானது.
இந்த நிலையில் வருமான வரித்துறையினரின் சோதனையை அடுத்து அமலாக்க துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.அதனை தொடர்ந்து அமலாக்க துறை அதிகாரிகளால் நள்ளிரவில் அதிரடியாக கைது அமைச்சர் செந்தில் பாலாஜி செய்யப்பட்டார்.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட பொது செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில், செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொண்டு சீல் வைத்த இடங்களில் மீண்டும் வருமான வரிதுறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் கரூர் மாநகராட்சி கோதை நகர் பகுதிக்கு உட்பட்ட அன்னை குடியிருப்பு பகுதியில் உள்ள சக்தி மெஸ் உரிமையாளர் கார்த்தி மற்றும் அதிபன் ரமேஷ் ஆகியவரது இருவரின் வீடுகளில் 5 வாகனங்களில் துப்பாக்கி ஏந்திய மத்திய ராணுவ படையினரின் உதவியுடன் சோதனையை மேற்கொண்டுள்ளனர்.