தக்காளி, இஞ்சி,சின்ன வெங்காயம் உள்ளிட்ட அத்யாவசிய உணவு பொருட்கள் கடும் விலை உயர்வை கட்டுப்படுத்த தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என ஜெயக்குமார் (Jayakumar) குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை ராயபுரத்தில் ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக தக்காளி வழங்கும் நிகழ்ச்சியை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார்,
அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம் இருக்கும் பொழுது, அதற்கென தனி கவனம் செலுத்தி, மானிய விலையில் அத்தியாவசிய பொருட்களை கொடுக்க நடவடிக்கை எடுக்க திமுக அரசு தவறிவிட்டதாக குற்றம் சாட்டினார். நியாய விலை கடைகள் மூலம் கொடுக்கப்படும் தக்காளி அனைவருக்கும் கிடைக்பதில்லை என்றார்.
மாமன்னன் படம் குறித்து கருத்து தெரிவிக்கும் சென்னை மாநகராட்சி மேயர், விலை உச்சத்தில் இருக்கும் தக்காளி விலை ஏற்றத்தை சமாளிக்க ஏழை எளிய மக்களுக்கு மானிய விலையில் தக்காளி கொடுக்கப்படுமா என்ற கேள்விக்கு பதில் அளிக்காமல், தக்காளி எங்களது துறை அல்ல என பதில் சொல்வது வேடிக்கையான ஒன்றாக உள்ளது என கூறினார்.
உணவு தட்டுப்பாடு இருக்கின்ற இந்த வேளையில், விளையும் நிலங்களை கையகப்படுத்தும் என்எல்சி நிர்வாகத்தின் முடிவை பரிசீலிக்க வேண்டும் என்றும், முன்னாள் அமைச்சர் டி ஜெயக்குமார் கூறினார். நெய்வேலியில் நேற்று நடந்த கலவரத்தை ஆளும் திமுக அரசு கட்டுப்படுத்த தவறி விட்டதாகவும், காவல்துறை சமயோசிதமாக செயல்படாததும் கலவரத்துக்கு காரணம் என குற்றம் சாட்டினார்.