உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் இந்தியா – தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 327 ரன்களைதென்னாப்பிரிக்க
அணிக்கு இலக்காக நிர்ணயித்ததுள்ளது.
இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் இந்தியா – தென்னாப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது . கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் இந்த போட்டி நடைபெறுகிறது.
இந்த போட்டியில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக டாஸ் வென்ற இந்திய அணி முதல் பேட்டிங் செய்ய முடிவு செய்தது . அதன்படி தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் மற்றும் கில் களமிறங்கினர்.
சிறப்பாக விளையாடிய ரோஹித் ஷர்மா 24 பந்துகளில் 40 ரன்கள் எடுத்த நிலையில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இந்த பக்கம் நிதானமாக விளையாடி வந்த கில் 24 பந்துகளில், 23 ரன்கள் சேர்த்து கேசவ் மஹாராஜ் பந்துவீச்சில் வீழ்ந்தார் .
இதையடுத்து இன்று தனது 35வது பிறந்தநாளை கொண்டாடும் விராட் கோலி தென்னாப்ரிக்கா அணிக்கு எதிராக 67 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார் . மறுபுறம் அபாரமாக ஆடிய ஸ்ரேயாஸ் அய்யர், 64 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார் .
தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ரேயாஸ் 87 பந்துகளில் 77 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார் . இதையடுத்து வந்த கே.எல். ராகுல் சொற்ப ரன்களில் வெளியேற அடுத்த வந்த சூர்யகுமார் யாதவ் 13 பந்துகளில் 22 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார்.
ஒருபுறம் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் ஆட்டமிழக்க மறுபக்க நிலைத்து நின்று ஆடிய விராட் கோலி தனது 49வது சதத்தை பூர்த்தி செய்தார். இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் 326 ரன்களை இந்திய அணி எடுத்திருந்தது .
இதையடுத்து 327 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தென்னாப்பிரிக்க அணி தற்போது விளையாடி வருகிறது. இந்நிலையில் இன்று நடைபெறும் இந்த போட்டியில் இந்திய அணிக்கு முதல் தோல்வியை தென்னாப்பிரிக்க அணி பரிசாக கொடுக்குமா இல்லையா என்பதை நாம் காத்திருந்து தான் பார்க்கலாம்.