ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்த‌லால் தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை? -அன்பில் மகேஷ் விளக்கம்!

indefinite-leave-for-school-colleges-across-tamil-nadu
indefinite leave for school colleges across tamil nadu
Spread the love

பள்ளி, கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை என்று வெளியாகும் தகவல் தவறானது என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவில் அடையாளம் காணப்பட்ட ஒமைக்ரான இஸ்ரேல், ஹாங்காங் உள்ளிட்ட சில நாடுகளில் பரவியுள்ளது.

இந்த உருமாற்றம் அடைந்த புதிய கொரோனா வைரஸானது தமிழகத்தில் பரவாமல் இருக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன்படி, ஒமிக்ரான் வைரஸ் பரவாமல் இருக்க, தென்னாப்பிரிக்கா, வங்கதேசம், சீனா உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு தமிழக அரசு கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதோடு, கூடுதல் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும் பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இந்த சூழலில் ஒமிக்ரான் வைரஸ் இந்தியாவிலும் பரவ வாய்ப்பு இருப்பதால் தமிழகத்தில் பள்ளிகள் மீண்டும் காலவரையற்ற விடுமுறை அளிக்கப்படும் என்ற வதந்தி சமூகவலைதளத்தில் பரவியது.

indefinite-leave-for-school-colleges-across-tamil-nadu
indefinite leave for school colleges across tamil nadu

இந்நிலையில் இதுதொடர்பாக விளக்கமளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், “ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்த‌லால் தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை என்று வெளியாகும் தகவல் தவறானது” என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.


Spread the love
Related Posts