எதிர்க்கட்சிகளின் கடும் அமளி காரணமாக மக்களவை நாளை காலை 11 மணி வரை ஒத்திவைத்து மக்களவை சபாநாயகர் உத்தரவிட்டார்.
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் வேளாண் சட்டங்கள் ரத்து செய்வதற்கான மசோதா உள்பட பல முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்படும் என கருதப்பட்டது.
இந்நிலையில், மக்களவை தொடங்கிய உடன் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டனர்.
மேலும் வேளாண் சட்ட ரத்து மசோதாவை விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் உறுப்பினர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் இந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில், எதிர்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
இருப்பினும் எதிர்க்கட்சிகளின் அமளிக்கு மத்தியில் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதா மக்களவையில் நிறைவேறியது.

இந்நிலையில் நாடாளுமன்ற மாநிலங்களவையில் எதிர்கட்சியினர் தொடர் அமளியில் ஈடுபட்டதால் எதிர்கட்சிகளை சேர்ந்த 12 எம்பிக்கள் நடப்புக் கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்து துணை சபாநாயகர் அறிவிப்பு வெளிட்டுள்ளார்.
மேலும், அவர்களின் தொடர் அமளி காரணமாக மக்களவை நாளை காலை 11 மணி வரை ஒத்திவைத்து மக்களவை சபாநாயகர் உத்தரவிட்டார்.