விருதுநகர், தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழை

weather-update-very-heavy-rain-fall-on-4-districts-in-tamil-nadu
weather update very heavy rain fall on 5 districts in amil nadu

குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக விருதுநகர், தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய கன மழை முதல் மிக கனமழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.

மேலும் மதுரை, திருநெல்வேலி, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும், வட கடலோர மாவட்டங்கள், ஏனைய டெல்டா மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

weather-update-very-heavy-rain-fall-on-4-districts-in-tamil-nadu
weather update very heavy rain fall on 4 districts in amil nadu

நாளை கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Total
0
Shares
Related Posts