கர்நாடக முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டிகே சிவக்குமாரும் பெங்களூரில் இன்று மதியம் 12.30 மணிக்கு பதவியேற்கின்றனர்.
கர்நாடக மாநிலத்தில் சட்டசபை பொது தேர்தல் கடந்த தினங்களுக்கு முன் நடந்து முடிந்தது. இதில் காங்கிரஸ் கட்சி 224 தொகுதிகளில் 135 இடங்களில் தனி பெறுபான்மையோடு வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் கடந்த 34 ஆண்டுகளுக்கு பிறகு கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை கைப்பற்றி வரலாற்றை பதித்ததுள்ளது. இதையடுத்து யார் முதலமைச்சர் ஆவது குறித்து நீண்ட இழுபறி நடைபெற்றது.
பின்னர் நீண்ட ஆலோசனைகளுக்கு பிறகு காங்கிரஸ் கட்சி தலைமை கர்நாடக முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டிகே சிவகுமாரும் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், இன்று மதியம் 12.30 மணிக்கு பெங்களூர் கன்டீரவா மைதானத்தில் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது.
கர்நாடகா முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டிகே சிவக்குமாரும் இன்று பதவியேற்க உள்ளனர். மேலும், கர்நாடக மாநிலத்தில் அமைய உள்ள அரசின் அமைச்சர்களும் பதவியேற்க உள்ளனர்.
மேலும் இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பீகார் முதல்வர் நிதிஷ்குமார், துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், என்சிபி தலைவர் சரத் பவார், மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே ஆகியோருக்கு கார்கே அழைப்பு விடுத்துள்ளார்.
தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா, ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் உள்ளிட்டோருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.