தெலங்கானா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரின் மகள் கவிதா வீட்டில், வருமான வரித்துறை சோதனை நடத்தி வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- தெலங்கானா மாநில முன்னாள் முதலமைச்சர் கே. சந்திரசேகர ராவின் மகள், கவிதா வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் தற்பொழுது சோதனை நடத்தி வருகிறார்.
- டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், கவிதாவிற்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.
- இதுதொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ அமைப்புகள் கவிதாவிற்கு சம்மன்கள் அனுப்பி இருந்தன.
- இந்நிலையில், ஐதராபாத்தில் உள்ள அவரது வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.