தெலுங்கானா முதல்வரும், தெலுங்கானா ராஷ்டிர சமிதி தலைவருமான கே.சந்திரசேகர் ராவ், கஜ்வெல் தொகுதியில் வேட்பாளராக இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
தெலுங்கானா 119 தொகுதிகளுக்குகான சட்டப்பேரவை தேர்தல் வரும் நவம்பர் 30ஆம் தேதி நடைபெற உள்ளது. டிசம்பர் 7-ம் தேதி வாக்குப்பதிவும், டிசம்பர் 11-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும்.
இதனை அடுத்து தெலுங்கானா, சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மிசோராம் என ஐந்து மாநில தேர்தலுக்கான முடிவுகள் டிசம்பர் 3ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.
அதன்படி,நவம்பர் 30ஆம் தேதி நடைபெற உள்ள தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்யும் பணிகள் துவங்கிவிட்டன.
அந்த வகையில் ,தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ், கஜ்வெல் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தார். இதனை தொடர்ந்து இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
முன்னதாக சித்திப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கோனைப்பள்ளி கிராமத்தில் உள்ள பாலாஜி கோவிலுக்குச் சென்று தேர்தல் அதிகாரியிடம் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன் பிரார்த்தனை செய்தார்.