“பாதுகாப்பு துறையில் வேலை” என்று கூறி ரஷ்யா அழைத்துச் செல்லப்பட்ட ஹைதராபாத் இளைஞர் ஒருவர் வலுக்கட்டாயமாக போரில் ஈடுபடுத்தப்பட்டு உயிரிழந்த சம்பவம் இந்தியா முழுக்க அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், “முக்கிய நகரங்கள் அனைத்திலுமே அதற்கான ஏஜெண்டுகளும் வலை விரித்துக் காத்திருக்கிறார்கள்” என உஷார் ரிப்போர்ட் வாசிக்கிறது வெளியுறவுத்துறை!
ஏமாற்றப்படும் இளைஞர்கள்:
கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் ரஷ்யா – உக்ரைன் போரில் இரு தரப்பிலும் இதுவரை லட்சக்கணக்கானோர் பலியாகி இருப்பதாக கூறப்படும் நிலையில், அந்த இரு நாடுகளுமே போரை தொடர்ந்து நடத்தி வருகின்றன. இருந்தாலும், இந்தியாவில் இருந்து மருத்துவம் படிப்பதற்காக ரஷ்யா செல்லும் மாணவர்களின் எண்ணிக்கையும் எப்போதும் போலவே தொடர்கிறது.
இதை காரணமாக வைத்து, “ரஷ்யாவில் வேலை, கை நிறைய சம்பளம்” என விளம்பரம் செய்து வேலையில்லாமல் தவிக்கும் இந்திய இளைஞர்களை குறிவைத்து களமிறங்கி இருக்கும் சிலர், அவர்களை டூரிஸ்ட் விசாவில் அழைத்துச் சென்று ரஷ்யாவுக்கு ஆதரவாக போர்முனையில் இருக்கும் வாக்னர் என்ற கூலிப்படையில் வலுக்கட்டாயமாக சேர்த்து விடுவதாகவும் அதிர்ச்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்படிச் சென்று உயிரிழந்தவர்களில் ஒருவர்தான் ஹைதராபாத்தைச் சேர்ந்த முகமது அஸ்பான்.
டூரிஸ்ட் விசாவில் வேலை..!
ஹைதராபாத் நகரைச் சேர்ந்த 30 வயது இளைஞரான முகமது அஸ்பான் வெளிநாட்டு வேலைக்காக முயற்சி செய்து வந்த நிலையில், “செக்யூரிட்டி வேலைக்காக ரஷ்யாவில் பணியாற்ற ஆட்கள் தேவை. அமெரிக்கன் டாலரில் கை நிறைய சம்பளம்” என்ற விளம்பரத்தை ஆன்லைனில் பார்த்ததாகவும், அதை தொடர்பு கொண்ட அஸ்பான், அவர்கள் கூறிய வழிமுறைகளை பின்பற்றி கடந்த சில மாதங்களுக்கு முன்பு டூரிஸ்ட் விசாவில் ரஷ்யா சென்றதாகவும் கூறப்படுகிறது.
அதன் பின்னர் சில நாட்கள் ஹைதராபாத்தில் உள்ள தனது பெற்றோர் மற்றும் மனைவுடன் குடும்பத்துடன் தொடர்பில் இருந்த அவர், ரஷ்ய ராணுவ உடையில் உள்ள தனது புகைப்படங்களை அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. சில வாரங்களுக்கு பிறகு அவரிடமிருந்து போன் எதுவும் வராததால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை தொடர்பு கொள்ள பல வகையிலும் முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. அதன் பின்னரும் அஸ்பானை அவர்களால் தொடர்பு கொள்ள முடியாததால் இது குறித்து ஹைதராபாத் எம்.பி.யும் முஸ்லீம் அரசியல் கட்சியொன்றின் தலைவருமான அசாதுதீன் ஒவைசியிடம் விசயத்தை தெரிவித்திருக்கிறார்கள்.
அதன் பின்னர், இந்தியாவில் உள்ள ரஷ்ய தூதரகம், ரஷ்யாவில் உள்ள இந்திய தூதரகம் ஆகியவற்றை தொடர்பு கொண்டு டூரிஸ்ட் விசாவில் ரஷ்யா சென்ற முகமது அஸ்பானின் நிலைகுறித்து அறிய முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. அப்போதுதான் உக்ரைனுடன் நடந்த ரஷ்ய போரில் ஈடுபடுத்தப்பட்ட அந்த ஹைதராபாத் இளைஞர் போர்க்களத்தில் மரணமடைந்து விட்டதாக தகவல் தெரிவித்திருக்கிறது இந்திய தூதரகம். இது, நேற்றைய தினம் உறுதிப் படுத்தப்படவே இந்திய இளைஞர் ஒருவர் வலுக்கட்டாயமாக போரில் ஈடுபடுத்தப்பட்டு உயிரிழந்த சம்பவம் நாடு முழுக்க பேரதிர்ச்சியை கிளப்பியுள்ளது.
தற்போது, உயிழந்த அஸ்பானின் உடலை இந்தியா கொண்டு வரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படும் நிலையில் அடுத்தடுத்து கிடைத்துவரும் தகவல்கள் அத்தனையுமே பொதுமக்களை மட்டுமல்லாது இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகளையும் அதிர வைத்துள்ளது.
இதையும் படிங்க: திருட்டில் ஈடுபட்ட பிரபல குத்துச்சண்டை வீரர் – சக வீராங்கனை புகார்..!!
காத்திருக்கும் ஏஜெண்டுகள்:
அதாவது, “ரஷ்யாவில் பாதுகாப்புத்துறையில் பணி. போரில் சிதிலமடைந்த கட்டிட இடிபாடுகளை அகற்றுவதுதான் வேலை. அமெரிக்கன் டாலரில் சம்பளம்” என கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆன்லைனில் வந்த விளம்பரத்தைப் பார்த்து தெலுங்கானா, குஜராத், கர்நாடகா, ஜம்மு காஷ்மீர், உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் டூரிஸ்ட் விசாவில் ரஷ்யா சென்றதாக கூறப்படுகிறது.
ஒருசிலர் விரும்பிச் சென்றாலும், பலரும் ஏமாற்றப்பட்டே அழைத்துச் செல்லப்படுகிறார்கள். ரஷ்யா சென்ற அவர்கள் ஏர்போர்ட்டை விட்டு வெளியில் வந்தவுடன் அவர்களை வேலைக்கு அழைத்து செல்வது போல ‘பாவ்லா’ காட்டி உக்ரைன் எல்லையில் போர் நடக்கும் பகுதிக்குள் கொண்டு விட்டு விடுவதாகவும் கூறப்படுகிறது. இதற்காக இந்தியா உட்பட உலகின் பல நாடுகளிலும் ஏஜெண்டுகள் இருக்கிறார்களாம்.
அங்கு இருப்பவர்களோ, “இந்தா பாருங்க, நீங்க டூரிஸ்ட் விசாவுலே இந்த பகுதிக்கு வந்திருக்கீங்க. இது சட்டப்படி குற்றம். உங்களுக்கு 10 வருசம் ஜெயில் கர்ஃபர்ம். குடும்பத்துக்கு லெட்டர் கூட போட முடியாது. தினமும் ஒரு வேளை மட்டும் தான் சாப்பாடு” எனக்கூறி பதற விடுவார்களாம்.
சல்லடையாக துளைக்கப்பட்ட அஸ்பான்:
பின்னர், “தப்பிக்க ஒரேயொரு வழிதான் இருக்கு. இங்கேயே உங்களுக்கு டிரைனிங் தாறோம். துப்பாக்கியை தூக்கிட்டு போருக்கு போங்க. மாசாமாசம் சம்பளத்தை நாங்களே உங்க வீட்டுக்கு அனுப்பிடறோம்” என ஆசைவார்த்தை கூறுவார்களாம். அதற்கு அவர்கள் ஒப்புக்கொள்கிறார்களோ இல்லையோ, ரஷ்யா – உக்ரைன் பார்டரில் உள்ள ‘பங்கர்கள்’ தான் அவர்களுக்கு இறுதி புகழிடமாகி விடுமாம். அப்படி மாட்டிக்கொண்டு உக்ரைன் ஏவுகனைகளால் சல்லடையாக துளைக்கப்பட்டு உயிர் இழந்தவர்தான் ஹைதராபாத்தைச் சேர்ந்த அந்த 30 வயது இளைஞர் எனக் கூறப்படுகிறது.
துபாயில் துவங்கும் ஆபரேசன்!
மேலும், அது போன்ற ஏமாற்று விளம்பரங்களை துபாயை அடிப்படையாகக் கொண்ட பைசல் கான் என்பவர் ஆன்லைன் மூலம் கொடுத்துள்ளதாகவும், அவர் மூலமாக ரஷ்யா சென்ற பல இந்திய இளைஞர்களை கட்டாயப்படுத்தி அவர்களுக்கு ஆயுதங்களை கையாளும் பயிற்சிகள் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், அவ்வாறு சிக்கிய இளைஞர்கள் அனைவரும் உக்ரைனின் கார்கிவ், டொனெட்ஸ்க் மற்றும் மரியோபோல் போன்ற நகரங்களை சுற்றி பணியமர்த்தப்பட்டனர் எனவும் தெரிய வருகிறது. ஆனால், அவர்கள் ரஷ்ய ராணுவத்திற்காக வேலை செய்கின்றனரா? அல்லது ‘வாக்னர்’ என்ற கூலிப்படை அமைப்புக்காக விற்கப்பட்டார்களா? என்பதும் தெரிய வரவில்லை எனவும் தெரிவிக்கின்றன அந்த அதிர்ச்சித் தகவல்கள்.
தற்போது, உயிழந்த அஸ்பானின் உடலை இந்தியா கொண்டு வரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படும் நிலையில் அடுத்தடுத்து கிடைத்துவரும் தகவல்கள் அத்தனையுமே பொதுமக்களை மட்டுமல்லாது இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகயும் அதிர வைத்துள்ளது.
அதாவது, “ரஷ்யாவில் வேலை, அமெரிக்கன் டாலரில் சம்பளம்” என கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆன்லைனில் வந்த விளம்பரத்தைப் பார்த்து தெலுங்கானா, குஜராத், கர்நாடகா, ஜம்மு காஷ்மீர், உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் டூரிஸ்ட் விசாவில் ரஷ்யா சென்றதாக கூறப்படுகிறது. ரஷ்யா சென்ற அவர்கள் ஏர்போர்ட்டை விட்டு வெளியில் வந்தவுடன் அவர்களை அழைத்துக் கொண்டு கிளம்பும் சிலர் ஓரிரு நாட்கள் அறைகளில் தங்க வைப்பதாகவும், பிறகு வேலைக்கு அழைத்து செல்வது போல ‘பாவ்லா’ காட்டி உக்ரைன் எல்லையில் போர் நடக்கும் பகுதிக்குள் கொண்டு விட்டு விடுவதாகவும் கூறப்படுகிறது.
அங்கு அவர்களை கைது செய்வது போல நடிக்கும் அதிகாரிகளைப் போன்ற தோற்றம் கொண்ட சிலர் அவர்களின் பாஸ்போர்ட்டை பிடுங்கிக் கொள்வார்களாம். பின்னர், “இந்தா பாருங்க, நீங்க டூரிஸ்ட் விசாவுலே இந்த பகுதிக்கு வந்திருக்கீங்க. இது சட்டப்படி குற்றம். உங்களுக்கு 10 வருசம் ஜெயில் தண்டனை கர்ஃபர்ம். குடும்பத்துக்கு லெட்டர் கூட போட முடியாது. தினமும் ஒரு வேளை மட்டும் தான் சாப்பாடு” எனக்கூறி பதற விடுவார்களாம்.
பின்னர் சிறிது நேரம் கழித்து, “அதற்கு ஒரேயொரு வழிதான் இருக்கு. இங்கேயே உங்களுக்கு டிரைனிங் தாறோம். துப்பாக்கியை தூக்கிட்டு போருக்கு போங்க. மாசாமாசம் லட்சக் கணக்கான ரூபாயை சம்பளமா நாங்களே உங்க வீட்டுக்கு அனுப்பிடறோம்” என ஆசைவார்த்தை கூறுவார்களாம். அதற்கு அவர்கள் ஒப்புக்கொள்கிறார்களோ இல்லையோ, ரஷ்யா – உக்ரைன் பார்டரில் உள்ள பங்கர்கள் தான் அவர்களுக்கு இறுதி புகழிடமாகி விடுமாம். அப்படி மாட்டிக்கொண்டு உக்ரைன் ஏவுகனைகளால் சல்லடையாக துளைக்கப்பட்டு உயிர் இழந்தவர்தான் ஹைதராபாத்தைச் சேர்ந்த அந்த 30 வயது இளைஞர் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க:NewsUpdate | பாஜக கூட்டணியில் இணைகிறதா பிஜூ ஜனதா தளம்.
உஷார் தரும் வெளியுறவுத்துறை:
கடந்த மாதம் 21ஆம் தேதி குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஹமில் மாங்கியா என்ற 23 வயது இளைஞர் இதே போல ரஷ்ய – உக்ரைன் போரில் உயிழந்ததாக தகவல் வெளியான போதுதான் இந்த ‘இல்லீகல் ஹியூமன் ட்ராஃபிக்கிங்’ விசயம் முதன் முதலாக வெளி உலகத்திற்கு தெரிய வந்ததாகவும், இந்தியாவில் இருந்து கடந்த சில மாதங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் ரஷ்யா சென்றுள்ளதாகவும் கூறும் வெளியுறவுத்துறை அதிகாரிகள், “அது போன்ற விளம்பரங்களை நம்பாமல் இளைஞர்கள் உஷாராக இருக்க வேண்டும்” எனவும் அலாரம் அடிக்கிறார்கள்
தற்போதைய நிலவரத்தின்படி, 20க்கும் மேற்பட்ட இந்திய இளைஞர்கள் அது போல போர்முனையில் சிக்கி இருப்பதாகவும், விரைவில் அவர்களை மீட்கும் ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் உறுதி அளித்துள்ளது இந்திய தூதரகம்.
அதற்குள் என்னவெல்லாம் நடக்குமோ..?!