ரேபரேலி காங்கிரஸ் வேட்பாளர் ராகுல் காந்தியை ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக ராகுல் காந்தி போட்டியிட உள்ளார்.
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் கிஷோர் லால் சர்மா போட்டியிட உள்ளார்.
மேலும் பா.ஜ.க. சார்பில் அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானி போட்டியிடுகிறார்.அமேதி தொகுதியில் இருந்து 3 முறை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட ராகுல் காந்தி, கடந்த 2019 மக்களவை தேர்தலில் அமேதியில் பா.ஜ.க. வேட்பாளர் ஸ்மிருதி இரானியிடம் தோல்வியடைந்தார்.
அதே சமயம் கேரளாவின் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி வெற்றி பெற்றார்.இந்த நிலையில், ரேபரேலி காங்கிரஸ் வேட்பாளர் ராகுல் காந்தியை ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது குறித்து கேரி காஸ்பரோவ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் : பழமொழி சொல்வது போல, முதலிடத்திற்கு சவால் விட, முதலில் ரேபரேலியில் வெற்றி பெற வேண்டும். எனக்கு பிடித்த இந்திய செஸ் வீரர் ராகுல் காந்தியே” என்று பதிவிட்டு கலாய்த்து உள்ளார்.
ஆனால் ராகுல் காந்திக்கு பிடித்த சர்வதேச செஸ் வீரர் காஸ்பரோவ் என்பது குறிப்பிடத்தக்கது.