2023 ஆம் ஆண்டிற்கான உலக மக்கள் தொகை (populous country) குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை நிதியம் தகவல் வெளியிட்டு உள்ளது.
அந்த வகையில், நடப்பு ஆண்டில் சீனாவின் மக்கள் தொகையை (populous country) விட இந்தியாவின் மக்கள் தொகை அதிகமாகி விட்டதாகவும், இதனால் இந்தியா முதலிடத்தை பிடித்திருப்பதாகவும், இந்த ஆண்டின் மத்தியில் இந்தியாவின் மக்கள் தொகை சீனாவை விட 30 லட்சம் அதிகமாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, தற்போது உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு என்ற பட்டியலில் இந்தியா முதல் இடத்தை பிடித்துள்ளதாக ஐநா கணித்து கூறியுள்ளது. இந்தியாவின் மக்கள் தொகை சுமார் 142.86 கோடி எனவும், சீனாவின் மக்கள் தொகை 142.57 கோடி எனவும் தோராயமாக கணிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011 இல் எடுக்கப்பட்ட நிலையில், அதன் பின்னர் 2021-ல் எடுக்கப்பட வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பு கொரோனா தொற்று காரணமாக தள்ளி வைக்கப்பட்டது.
எனவே, இந்திய மக்கள் தொகையின் அதிகாரப்பூர்வமான எண்ணிக்கை கணக்கிடப்படவில்லை எனவும், பல்வேறு தரவுகளின் அடிப்படையில் இந்த கணக்கு முடிவை ஐநா வெளியிட்டு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினை இந்தியா மற்றும் சீன நாடுகள் கொண்டிருப்பதாகவும், இருந்தாலும் சமீப ஆண்டுகளாக இரு நாடுகளின் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் குறைவான வேகத்திலேயே உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் பல ஆண்டு காலமாகவே மக்கள் தொகை வளர்ச்சி ஆனது கணிசமாக குறைந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.