ஆர் எஸ் எஸ் மார்க்கத்தில் வந்தவர்கள் மகாத்மா காந்தியை பற்றி அறிந்திருக்க வழியில்லை என்று பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சுக்கு ராகுல்காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.
2024 ஆம் ஆண்டுக்கான மக்களவை இறுதி கட்ட தேர்தல் வரும் ஜூன் 1-ம் தேதி நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து ஜூன் 4 ஆம் தேதி நாடே எதிர்பார்த்து கொண்டு இருக்கும் வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. இந்நிலையில், தனியார் செய்திச் சேனல் ஒன்றுக்கு பிரதமர் நரேந்திர மோடி அளித்த பேட்டியில்
மகாத்மா காந்தி மிகவும் புகழ் பெற்ற மனிதர். நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் முடிந்த நிலையில் மகாத்மா காந்தியைப் பற்றி உலகத்துக்கு தெரிவித்திருக்க வேண்டியது நமது பொறுப்பு அல்லவா? ஆனால், உலக நாடுகளுக்கு அவரைப் பற்றி அவ்வளவாக தெரியவில்லை. மன்னிக்கவும். காந்தி திரைப்படம் வெளியான பிறகுதான் அவரைப் பற்றி உலக நாடுகளுக்கு தெரியவந்தது. அந்தப் படத்தை நாம் தயாரிக்கவில்லை.
இதையும் படிங்க: ”காந்தியை அறியாத ஜோக்கர் நமக்குத் தேவையில்லை..” பிரதமரை தாக்கிய காயத்ரி ரகுராம்!1
மார்ட்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலாவைப் பற்றி உலகம் நன்கு அறிந்திருந்த நிலையில், மகாத்மா காந்தி அவர்களுக்கு சளைத்தவர் அல்ல. இதை ஏற்றுக்கொள்ள வேண்டும். உலகத்தை சுற்றி வந்த பிறகு இதைச் சொல்கிறேன் என்று தெரிவித்து இருந்தார்.
பிரதமர் நரேந்திர மோடியின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.மேலும் காந்தி பற்றிய மோடியின் பேச்சுக்கு ராகுல்காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.
தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி ”ஆர் எஸ் எஸ் மார்க்கத்தில் வந்தவர்கள் மகாத்மா காந்தியை பற்றி அறிந்திருக்க வழியில்லை . மகாத்மா காந்தி சூரியனைப்போன்றவர்.
உலகம் முழுவதும் சூழ்ந்துள்ள இருளை அகற்றுவதற்கான உந்து சக்தி. உண்மை மற்றும் அகிம்சை மூலம் போராடும் தைரியத்தை காந்தி வழங்கியவர்” என்றுகாந்தியை புகழாரம் சூட்டியுள்ளார் ராகுல்காந்தி. டெல்லியில் காந்திசிலை முன்பு பேசிய இந்த வீடியோவை அவர் தன் வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.