எதிர்க்கட்சிகளின் கூட்டணியின் பெயரை இந்தியாவிலிருந்து பாரத் என்று மாற்றினால், அவர்கள் என்ன செய்வார்கள்? என்று கெஜ்ரிவால் கேள்வியெழுப்பியுள்ளார்.
2024 நாடாளுமன்றத்தேர்தலில் பாஜகவை வீழ்த்த 26 எதிர்க்கட்சிகள் கட்சிகள் ஒன்றிணைத்து INDIA என பெயரிட்டு சுருக்கமாக இந்தியா என அழைத்தனர். இதற்க்கு பாஜவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.இந்தியாவின் எதிர் கட்சிகள் ஒன்றிணைந்து தங்கள் அணிக்கு INDIA என பெயர் சூட்டிய பிறகு, பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பாரத் என்ற சொல்லை பயன்படுத்த தொடங்கி வருகின்றனர்.
இந்த நிலையில்,டெல்லியில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ளும் முக்கிய பிரமுகர்களுக்கு வரும் செப்டம்பர் 9ஆம் தேதி குடியரசு தலைவர் மாளிகையில் விருந்து வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.இதற்காக குடியரசுத் தலைவர் மாளிகை அனுப்பிய அதிகாரப்பூர்வ அழைப்பிதழில் இந்திய குடியரசுத் தலைவர் என்பதற்கு பதிலாக பாரத குடியரசு தலைவர் என அச்சிடப்பட்டு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்தியாவில் இருந்து பாரத் என பெயரை மாற்றுவது குறித்து பாஜகவின் இந்த செயலுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடுமையாக விமர்சித்துள்ளார்.
டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இந்தியாவில் இருந்து பாரத் என பெயரை பாஜக மாற்றுவதற்கு காரணம் தோல்வி பயம் தான். மேலும் இந்திய கூட்டணிக்கு பயப்படுவதாகவும், இதனால் நாட்டின் பெயரை இந்தியாவிலிருந்து பாரத் என்று மாற்ற முயற்சிப்பதாகவும் கூறினார்.
மேலும்இது நாட்டுக்கு செய்யும் துரோகம். இந்திய கூட்டணியின் காரணமாக அவர்கள் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
மேலும் இந்திய கூட்டணி தனது பெயரை பாரத் என மாற்றினால் என்ன செய்விர்கள் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வியெழுப்பியுள்ளார்.