இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு பிப்ரவரி மாதத்திற்குள் உச்சத்தை எட்டும் என அமெரிக்க மருத்துவ நிபுணர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஒமைக்ரானால் பாதிப்படுவோர் எண்ணிக்கை ஐந்து லட்சம் வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார்.
தென்னாபிரிக்காவில் கண்டரியப்பாட்ட புதிய வகைக் கொரோனாவான ஒமைக்ரான் உலக நாடுகளில் பரவ தொடங்கியத்தை அடுத்து இந்தியாவிலும் பரவத்தொடங்கி உள்ளது.
இந்தியாவிலன் டெல்லி, கர்நாடகா, ராஜஸ்தான், கேரளாவைத் தொடர்ந்து மகாராஷ்டிராவில் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு அதிக அளவில் பதிவாகி உள்ளது. இதையடுத்து பல்வேறு மாநிலங்கள் தொற்று பரவலைத் தடுக்க கட்டுப்பாடுகள் மற்றும் இரவு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளன.
இந்நிலையில் அமெரிக்காவின் சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டு நிறுவன தலைவர் டாக்டர் கிறிஸ்டோபர் முர்ரே, இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு குறித்து புதிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.
அதன்படி:
இந்தியாவில் ஒமைக்ரான் அலை தொடங்கியுள்ளது என்றும் கடந்த ஆண்டு டெல்டா வைரஸ் அலையின் தாக்கத்தை விட இதில் அதிகம் பேர் பாதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அடுத்த மாதம் சுமார் ஐந்து லட்சம் வரை உயரக்கூடும் என தெரிவித்த அவர் ஒமைக்ரான் வைரஸின் வீரியம் குறைவானது என்றும் நோய் தொற்று உள்ளவர்களில் 85 சதவீதம் பேருக்கு எந்த அறிகுறிகளும் இருக்காது என்றும் தெரிவித்தார்.
அத்துடன் தடுப்பூசி செலுத்திக் கொண்டால், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது மற்றும் இறப்பு ஆகியவற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ளலாம் என்றும் ஒமைக்ரான் பாதிப்பில் இறப்புகள் மிக குறைவாக இருக்கும் என்றும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.