எகிப்து நாட்டிலுள்ள கெய்ரோ நகரில் ஐஎஸ்எஸ்எப்( issf ) எனப்படும் உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி இந்த மாதம் 12 தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, சீனா ஆகிய ஆசிய அணிகளும் பங்கேற்றுள்ளன. நேற்று நடந்த 10 மீட்டர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய ஆடவர் அணி சாதனை செய்துள்ளது.
இறுதி போட்டியில் சீனா அணியை ருத்ராங்க்ஷ் பாட்டீல், அர்ஜுன் பாபுதா மற்றும் கிரண் ஜாதவ் அடங்கிய இந்திய அணி 16-10 என்ற கண்ணக்கில் வென்று தங்க பதக்கத்தை தட்டி சென்றது. இந்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி பெரும் 5 வது தங்க பதக்கம் இதுவாகும்.
பெண்கள் பிரிவின் மற்றொரு 10 மீட்டர் போட்டியில் மெஹுலி கோஷ், இளவேனில் வாலறிவன் மற்றும் மேகனா அடங்கிய இந்திய பெண்கள் அணி ஜெர்மனியை 17-11 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை வென்றது.
இதுவரை நடந்த ஐஎஸ்எஸ்எப் ( issf ) போட்டிகளில் 5 தங்கம், 2 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தமாக 13 பதக்கம் வென்று இந்திய அணி பதக்க பட்டியலில் 2 ஆம் இடத்திலுள்ளது. 13 தங்கம், 6 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 22 பதக்கத்துடன் சீனா முதலிடதிலுள்ளது.