இந்திய ராணுவத்திற்காக ட்ரோன்கள் தயாரிப்பதற்காக தக்ஷா குழு ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித்குமார். பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ள இவருக்கு, ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர். கடைசியாக அஜித் நடிப்பில் துணிவு திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து விடாமுயற்சி என்ற என்ற படத்தில் நடிக்க உள்ளார்.
இப்படி சினிமாவில் பிஸியாக நடித்து வரும் நடிகர் அஜித் , பைக் ரேசிங், துப்பாக்கி சுடுதல் மற்றும் ட்ரோன்கள் உருவாக்குவது உள்ளிட்டவற்றிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள அந்த குழுவினருக்கு ட்ரோன்கள் தயாரிப்பது சம்பந்தமான ஆலோசனைகளை வழங்குவதற்காக அஜித் நியமிக்கப்பட்டு இருந்தார்.
தக்ஷா குழு கடந்த 2018-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ட்ரோன் போட்டியில் பங்கேற்று இருந்தது. இதுதவிர ஏராளமான சர்வதேச ட்ரோன் போட்டிகளிலும் பங்கேற்று வெற்றி பெற்றது.
இந்நிலையில், இந்தியா ராணுவத்திற்காக ட்ரோன்களை தயாரித்து கொடுக்கும் பணிக்கு தர்ஷா குழு ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. அடுத்த 12 மாதங்களில் இந்திய ராணுவத்திற்கு தேவையான 200 ட்ரோன்களை தக்ஷா குழு தயாரித்துக் கொடுக்க உள்ள நிலையில் இதற்காக ரூ.165 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.