உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று வரும் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இதுவரை 12 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இதில் நேற்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற 12வது லீக் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இதில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து இந்திய அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.
ஆட்டத்தின் தொடக்கம் முதலே இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் தினறிய பாகிஸ்தான் அணி 191 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதையடுத்து 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அண் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடியது. அதிரடியாக ஆடிய கேப்டன் ரோகித் சர்மா 63 பந்துகளில் 86 ரன்கள் எடுத்தார். இந்த சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ரேயஸ் ஐயர் அரைசதம் அடித்து அசத்தினார் .
இறுதியில் இந்திய அணி 30.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்தது 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இது இந்திய அணியின் 3வது வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.
48 ஆண்டு கால ஒரு நாள் உலகக்கோப்பை வரலாற்றில் இந்திய அணி பாகிஸ்தானிடம் ஒருபோதும் தோற்றதில்லை அதனை மீட்டும் நிலை நாட்டும் வகையில் இந்திய அணி இந்த அற்புதமான வெற்றியை பதிவு செய்து கெத்து காட்டியுள்ளது .
இந்திய அணியின் இந்த மகத்தான வெற்றிக்கு பிரதமர் மோடி உளப்பட ஏரளாமான அரசியல் தலைவர்களும். முன்னாள் கிரிக்கெட் வீரர்களும், திரை பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் .