சந்திரயான்-3 சாதனையை தொடர்ந்து, சூரியனின் வெளிப்புற பகுதியை ஆய்வு செய்ய ஆதித்யா எல்-1 விண்கலத்தை இன்று காலை 11.50 மணிக்கு விண்ணில் ஏவியது இஸ்ரோ.
கடந்த ஜூலை மாதம் 23 ஆம் தேதி நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து இஸ்ரோவின் அடுத்த முக்கிய இலக்காக சூரியனை ஆய்வு செய்வதற்காக ‘ஆதித்யா எல்-1’ என்ற விண்கலம் தயாரிக்கப்பட்டது .
இந்நிலையில் ஆதித்யா L-1 இன்று, விண்ணில் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு, இதற்கான 24 மணி நேர கவுண்ட் டவுன் நேற்று காலை 11.50 மணிக்கு தொடங்கியது.
அதன் படி இஸ்ரோவின் கட்டுப்பாட்டில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் மூலம் ஆதித்யா L-1 இன்று காலை 11.50 மணிக்கு விண்ணில் பாய்ந்தது.
இந்த செயற்கைக்கோள், பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் நிலைநிறுத்தப்பட்டு, இந்த சூரியனில் இருந்து வெளிவரக்கூடிய கதிர்கள் சூரியனில் இருந்து வெளிவரக்கூடிய கதிர்கள், அதன் காந்தப்புலங்கள், சூரிய புயல், ஈர்ப்பு விசை, குறித்தும் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு அங்கிருந்து பூமிக்கு செயற்கைக்கோளின் பதிவு செய்யக்கூடிய படங்கள் அதிவேகமாக அனுப்பி வைக்கவுள்ளது.
சூரியன் குறித்த ஆய்வுக்காக அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள் மட்டுமே இதுவரை விண்கலங்களை அனுப்பியுள்ளன. இந்த நாடுகளில் இருந்து சூரியனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள செயற்கைக்கோளை விட ஆதித்யா செயற்கைக்கோள் அதிக தரவுகளை கொடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது