தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலுள்ள கழிப்பறையில் பெண் சிசுவின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பெண் ஒருவரை இருதினங்களுக்கு முன் காவல்துறையினர் கைது செய்தனர்.
தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் கழிப்பறையில், கடந்த 4-ஆம் தேதி வரவில்லை என சுத்தம் செய்ய சென்ற தூய்மைப் பணியாளர்கள், கழிவறையுடன் இணைப்பில் உள்ள தண்ணீர் தொட்டியைத் திறந்து பார்த்துள்ளனர்.
அப்போது பிறந்து சில மணிநேரங்களே ஆன பெண் சிசுவின் சடலம் தொப்புள் கொடியுடன் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் இதுகுறித்து காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
இதனை அடுத்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தீவிர சிகிச்சை பிரிவிலுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை அடிப்படையில் விசாரணையை தொடங்கினர்.
அந்த சிசிடிவி கமராவில் நைட்டி அணிந்த பெண் ஒருவர் தலையில் குல்லா, மாஸ்க் அணிந்தபடி கர்ப்பிணிகள் கழிவறைக்குச் சென்று நீண்ட நேரம் கழித்து வெளியில் வரும் காட்சிகள் அந்த பதிவாகி இருந்தது. இதனால் அப்பெண்ணின் மீது சந்தேகம் அடைந்த காவல் துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
அந்த பெண்ணிடம் நடத்தப்பட்ட விசாரணையில், வல்லம் அருகே ஆலக்குடி சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவரின் 23 வயதான மகள் பிரியதர்ஷினியை என்பதும் தெரியவந்தது.
மேலும் அந்த பெண் திருப்பூரிலுள்ள பின்னலாடை நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த போது ஒருவரை காதலித்து வந்ததும், அதில் ஏற்பட்ட தொடர்பில் கர்ப்பமானதும் தெரிய வந்தது. மேலும் காதலன் திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டதால், கர்ப்பமானதை மறைத்த பிரியதர்ஷினி வெளியில் சொல்லாமல் இருந்து வந்துள்ளார்.
இதனால் வேறு யாருக்கும் தெரியாமல் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள கழிப்பறைக்குச் சென்று தானே பிரசவித்து, அக்குழந்தையைக் கழிவறை தொட்டியில் அமுக்கி கொலை செய்திருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதனை அடுத்து அந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.