வெள்ளி பதக்கம் வென்ற பி.வி.சிந்து..!

இந்தோனேசியாவின் பாலி நகரில் உலக டூர் பைனல்ஸ் பேட்மிண்டன் போட்டி நடைபெற்று வருகிறது.

இதில் குரூப்-ஏ பிரிவில் இடம்பெற்ற இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். அரையிறுதிப் போட்டியில் ஜப்பான் வீராங்கனை அகானே யமகுச்சியை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

இந்நிலையில், தங்கப் பதக்கத்துக்கான இறுதிப் போட்டியில் பி.வி.சிந்து, தென்கொரிய வீராங்கனை ஆன் சியோங் பலப்பரீட்சை நடத்தினர். நடப்பு உலக சாம்பியனான சிந்து, உலகின் ஆறாவது இடத்தில் உள்ள கொரிய வீராங்கனையின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் தடுமாறினார். இறுதியில் பி.வி.சிந்து 16-21, 12-21 என்ற நேர்செட்களில் தோல்வியடைந்தார். இதனால் அவர் வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார்.

உலக டூர் பைனல்சில் மூன்றாவது முறையாக இறுதிச்சுற்று வரை முன்னேறிய சிந்து, 2018ம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.

Total
0
Shares
Related Posts