நாகலாந்து மாநிலத்தின் மோன் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் 5 நபர்களுக்கு மேல் பொதுவெளியில் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாகலாந்து மாநிலம் மியான்மர் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள மோன் மாவட்டதில் ஒடிங் என்ற கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள், அங்குள்ள ஒரு நிலக்கரி சுரங்கத்தில் பணியாற்றி விட்டு வீடு திரும்பி கொண்டு இருந்தனர்.
அப்போது, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடு பட்டு இருந்த பாதுகாப்பு படையினர், வேனில் வந்த தொழிலாளர்களை கிளர்ச்சியாளர்கள் எனக்கருதி தவறுதலாக துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 13 பேர் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த சம்பவத்திற்கு நாகாலாந்து முதலமைச்சர் நெய்பியு ரியோ, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து குறித்து உயர்மட்ட சிறப்பு விசாரணைக் குழு விசாரணை நடத்தி வரும் நிலையில் நிலையில், ராணுவமும் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்த சம்பவத்தால், மோன் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.
இதன் காரணமாக மோன் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 5 நபர்களுக்கு மேல் பொதுவெளியில் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகளுக்கான வாகனங்கள் தவிர, பொதுவாகனங்கள் இயக்க தடையும் விதிக்கப்பட்டுள்ளது.