பாமக மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை அதிமுக தொடங்கியதாக தகவல் வெளியான நிலையில் தற்போது பாமக மறுப்பு PMK Refusal தெரிவித்துள்ளது .
பாமக உடன் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கியது என இன்று காலை ஒரு தகவல் பரவியது
அந்த தகவலில் தேமுதிக உடன் அதிமுக குழுவினர் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளனர். லோக்சபா தேர்தலுக்காக அதிமுக கூட்டணி குழுவினர் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளனர்
அதிமுக கூட்டணியில் பாமக, தேமுதிக நிச்சயம் இணையும் என எதிர்பார்க்கப்படுவதாக தகவல் வெளியாகி இருந்தது .
இந்நிலையில் அந்த தகவல் முற்றிலும் வதந்தி அதற்கு நாங்கள் மறுப்பு தெரிவிக்கிறோம் என பாமக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை நடைபெறும் பாமகவின் பொதுக்குழு கூட்டத்திற்கு பின்னரே கூட்டணி தொடர்பாக முடிவு செய்யப்படும். தற்போது வரை யாருடனும் கூட்டணி தொடர்பாக பேசவில்லை.
பாமக மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை அதிமுக தொடங்கியதாக வந்த தகவல் அதிகாரப்பூர்வ தகவல் அல்ல என என பாமக தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாமக பொதுக்குழு கூட்டம் சென்னையில் நாளை கூடுகிறது. பொதுக்குழுவில் ஆலோசித்த பின்னரே கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும் என அக்கட்சி தரப்பில் விளக்கமளித்துள்ளது.
தற்போது வரை எந்தக் கட்சிகளுடன் கூட்டணி பேசுவார்த்தை தொடங்கவில்லை என பாமக PMK Refusal தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இந்தியா முழுவதும் பல்வேறு கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் பட்டியல் தயாரிப்பு உள்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
Also Read : https://itamiltv.com/ops-going-from-town-to-town-dindigul-srinivasan/
இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து பா.ம.க., தே.மு.தி.க. உடன் அ.தி.மு.க. பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியானது.
அ.தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவை சேர்ந்த நிர்வாகிகள் பா.ம.க., தே.மு.தி.க. உடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கபட்டது.
பா.ம.க. , தே.மு.தி.க. கூட்டணியை உறுதி செய்யும் பணியில் அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, சி.வி. சண்முகம், தங்கமணி பேசி வருவதாகவும் தகவல் வெளியானது.