International ban on Indian spices : உணவு… சாப்பாடு… மனிதர்களின் தினசரி வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்று…
இன்றைய காலகட்டத்தில் பலர் வீட்டில் சமைப்பதை விட வெளியில் சாப்பிடுவதையே விரும்புகின்றனர்.
கட் ஹெல்த் (gut health) என்ற வார்த்தை சமூகத் தளங்களில் ட்ரெண்ட் ஆவதைத் தொடர்ந்து, சிலர் வீட்டு உணவுகளைத் தேடிச் செல்கின்றனர்.
ஆனால் வீட்டில் சமைக்கும் உணவுகளிலும் கூட கடைகளில் விற்கப்படும் மசாலா பொருட்களையே பயன்படுத்துகின்றனர்.
இவை உடலுக்கு நல்லதா?
இந்தியாவில் மசாலா பொருட்கள் பல முன்னணி நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்பட்டு, பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஹாங்காங்கின் உணவு பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறை ஆணையமானது (Food Safety and Standards Authority of India) இந்திய மசாலா பொருட்களை ஆய்வு செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க : பறவைக் காய்ச்சல் எதிரொலி… தமிழக எல்லையில் தீவிர கண்காணிப்பு!
இந்த அறிக்கையில், இந்திய நிறுவனங்களின் மசாலா பாக்கெட்களில் ஆபத்தான நச்சுப் பொருள் சேர்க்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளது.
எம்டிஹெச் நிறுவனத்தின் மிஸ்க்டு மசாலா, சாம்பார் மசாலா, கறி மசாலா மற்றும் எவரெஸ்ட்டின் மீன் கறி மசாலா போன்ற மசாலா வகைகளில் புற்றுநோயை உண்டாக்கும் எத்திலீன் ஆக்சைடு இருப்பதை அந்நிறுவன உறுதி செய்துள்ளது.
எத்திலீன் ஆக்சைடு கலந்த உணவை எடுத்துக்கொண்டால் நீண்ட காலத்துக்கான உடல்நலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
மேலும் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனவே சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி ஏஜென்சியின் வழிகாட்டுதலின் படி, குரூப் 1 கார்சினோஜென் பட்டியலில் இந்த மசாலா பொருட்கள் சேர்க்கப்படுவதாக அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து ஹாங்காங் மற்றும் சிங்கப்பூர் நாட்டில் உள்ள உணவுப்பொருள் ஒழுங்குமுறை ஆணையம் இந்த மசாலா பொருட்களுக்குத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
கடைகளிலிருந்து உடனடியாக அகற்றுமாறும், மேலும் தொடர்புடைய நிறுவனங்கள் அவற்றைத் திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆணை பிறப்பித்துள்ளது.
ஹாங்காங், சிங்கப்பூர் அரசுகள் எடுத்துள்ள இந்த நடவடிக்கை இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது International ban on Indian spices.
இதையும் படிங்க : RTE 2024 – 25 : தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை – இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!