மாமல்லபுரத்தில் ஒலிம்பியாட் போட்டி நடப்பதை முன்னிட்டு ஜூலை 28-ல் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் ஜூலை 28-ம் தேதி உள்ளூர் விடுமுறை என அமைச்சர் ஏ.வ.வேலு கூறியுள்ளார்.
ஒலிம்பியாட் முதலில் ரஷ்யாவில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் நடந்துகொண்டிருக்கும் ரஷ்ய- உக்ரைன் போர் காரணமாக, இந்தியாவில் இந்த போட்டியை நடத்த வாய்ப்பு கிடைத்தது. உலகின் மிகப்பெரிய செஸ் போட்டியை நடத்தும் உரிமையை தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கியது.
இதனை தொடர்ந்து 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகின்ற ஜூலை 28-ந்தேதி முதல் ஆகஸ்ட் 10-ந்தேதி வரை மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் உலகம் முழுவதும் 190 நாடுகளில் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தமிழகத்தின் செழுமையான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் மாபெரும் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் ஜூலை 28-ம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் பங்கேற்கின்றனர். கடந்த ஜூன் 19 அன்று, செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான முதல் ஜோதி ஓட்டத்தை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த நிலையில் மாமல்லபுரத்தில் ஒலிம்பியாட் போட்டி நடப்பதை முன்னிட்டு ஜூலை 28-ல் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் ஜூலை 28-ம் தேதி உள்ளூர் விடுமுறை என அமைச்சர் ஏ.வ.வேலு கூறியுள்ளார்.