துபாயில் 75 ஆண்டு காலத்தில் இல்லாத அளவிலான கன மழை பெய்து வருகிறது. கடந்த 12 மணிநேரத்தில் 100 மில்லி மீட்டர்வரை மழைப திவாகிஉள்ளது.100மில்லி மீட்டர் என்பது துபாயில் ஓராண்டிற்கு பெய்யக்கூடிய சராசரி மழை அளவு என்றும் அரசுதரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரலாறு காணாத இந்த மழையால் போக்குவரத்து முடங்கி உள்ளது, மேலும்கார், லாரி உள்ளிட்ட வாகனங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட காட்சிகளும் இணையத்தில் பரவி வருகிறது.
மேலும்குடியிருப்புபகுதிகள், மால்கள், வணிக வளாகங்கள்,விமானநிலையம் என பல பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: வெள்ளத்தில் மிதக்கும் துபாய் – 6 விமானங்கள் ரத்து!
இதனால் துபாயிலிருந்து மற்றநாடுகளுக்கு செல்லும் விமானங்கள் மற்றும் பிறநாடுகளிலிருந்து அமீரகத்திற்கு வரும் விமானங்கள் பலவேறு பகுதிகளுக்கு வழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது, மேலும் சிலரத்து செய்யப்பட்டுள்ளது.
துபாய்மட்டுமின்றி, ஓமன் மற்றும் பஹ்ரைனிலும் கனமழை பெய்து வருகிறது. இதில் ஓமனில் பெய்த கனமழைக்கு குழந்தைகள் உட்பட 20பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் தொடர்ந்து சில நாட்களுக்கு ஓமனின் சில பகுதிகளில் மித முதல் கனமழை பெய்யகூடும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கொடூர விபத்து – 14 பேர் உயிரிழப்பு!
கனமழை, வெள்ளம் எதிரொலியாக, பள்ளிகள் நாளை வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பை முன்னிட்டு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
மேலும் அரசு பணியாளர்கள் வீட்டில் இருந்து பணியாற்ற நாளை வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.