பரபரப்பாக நடந்து கொண்டு இருக்கும் TATA IPL 2023 Match no. 33 யில் CSK மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் நேற்று மோதினார்கள். இதில், CSK 49 ரன்கள் வித்தியாசத்தில் CSK, கொல்கத்தாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்று தரவரிசைப் பட்டியலில் முதல் இடத்துக்கு சென்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து, நடந்து முடிந்த ஆட்டத்தை பற்றி தல தோனி (ms dhoni) பேசுகையில், “கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. கொல்கத்தா ஈடன் காடன் மைதானத்திற்கு அதிகப்படியான எண்ணிக்கையில் வந்து ஆதரவலளித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களுக்கு நன்றி. என்க்காக மஞ்சள் ஜெர்சியில் வந்திருந்தவர்களை பார்க்கும் பொழுது மகிழ்ச்சியாக உள்ளது. நீங்கள் இவ்வாறு வந்திருப்பது என்னை IPL போட்டிகளிலில் இருந்து நான் விடை பெறுவதற்கு முன்னதாக நீங்கள் சொல்லும் வாழ்த்தாக எண்ணுகிறேன்.” எனக் கூறியுள்ளார்.
இதன் மூலமாக மறைமுகமா தோனி அவர்கள் ஐபிஎல்-ல் இருந்து ஓய்வு பெற போவதாக கூறி இருக்கிறார். இதை கேட்ட பல ரசிகர்கள் அதிர்ச்சியில் இருந்தாலும், நாம் அனைவரும் தோனியின் கிரிக்கெட் பயண காலகட்டத்தில் கிரிக்கெட் பார்த்து வளர்ந்திருக்கிறோம் என்று நினைக்கும் போதே மகிழ்ச்சியாக உள்ளது.
ஆனால், தற்பொழுது அவர் ஓய்வு பெற போகிறார் என்ற செய்தியை கேட்கும் போது வேதனையாக இருந்தாலும் பெருமையாக உள்ளது. இது குறித்து ரசிகர்களான நீங்கள் அவர் அடுத்த வருடமும் விளையாட வேண்டுமா என்பதை கமெண்ட் பாக்சில் பதிவு செய்யுங்கள்.