ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசிக்கு ( PMModi condoles ) பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இரான் நாட்டின் தெஹ்ரானில் இருந்து கிட்டத்தட்ட 600 கி.மீ. தூரத்தில் கிழக்கு அஜர்பைஜானில் உள்ள ஜோல்ஃபாவில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக அந்நாட்டு ஊடங்கள் நேற்று அதிர்ச்சி தரும் தகவல்களை வெளியிட்டன .
ஈரான் அதிபருடன் அந்நாட்டு அமைச்சர் உசேன் உள்ளிட்டோர் பயணித்ததாக கூறப்படும் நிலையில் ஹெலிகாப்டரை தேடும் பணிகளை முடுக்கிவிடப்பட்டது.
மோசமான வானிலையால், விபத்து நடந்த இடத்திற்கு மீட்புப்படையினர் செல்வதில் சிக்கல் ஏற்படித்திருந்த நிலையில் டிரோன்கள் மூலம் மீட்புப் பணி தீவிரபடுத்தப்பட்டது.
Also Read : 2.66 கோடி செல்போன்களுக்கு கனமழை எச்சரிக்கை குறுஞ்செய்தி – பேரிடர் மேலாண்மைத்துறை..!!
இதையடுத்து விபத்து நடந்து 17 மணி நேரத்திற்கு பின் ஹெலிகாப்டரின் உடைந்த பாகங்கள் கண்டறியப்பட்ட நிலையில் ஹெலிகாப்டர் விபத்தில் யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என ஈரான் ஊடகங்கள் தகவல் தெரிவித்தன .
இந்நிலையில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் உடல் பல மணிநேர போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்டது .
இதையடுத்து ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசிக்கு உலக தலைவர்கள் அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் தற்போது பிரதமர் நரேந்திர மோடியும் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசிக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறிருப்பதாவது :
இந்தியா-ஈரான் இடையேயான இருதரப்பு உறவை வலுப்படுத்த இப்ராஹிம் ரைசி அவர்களின் பங்களிப்பு ( PMModi condoles ) எப்போதும் நினைவுகூரப்படும் என்றும், இந்த துயரமான நேரத்தில் இந்தியா ஈரானுடன் துணை நிற்கும் என்று பிரதமர் மோடி தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார் .