எழுதாத பேனாவிற்கு நடு கடலில் 81 கோடி ரூபாய் செலவில் சிலை எதற்கு? என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதியின் இடைத்தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து தேர்தல் களமானது சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சுமார் 7 மணி நேரம் நடந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அதிமுகவின் தேர்தல் பணி குழுவை எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். மேலும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.
இதில், கலந்து கொண்டு பேசிய எடப்பாடி பழனிசாமி, தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசுக்கு இந்த இடைத்தேர்தலில் அவர்களுக்கு பாடம் புகுட்ட வலியுறுத்தினார்.
திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு மின் கட்டணம், சொத்து வரி, உள்ளிட்டவை அதிகரித்து பொதுமக்கள் பெரும் இன்னல்களை சந்திப்பதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் எழுதாத பேனாவிற்கு 81 கோடி ரூபாய் செலவில் நடுக்கடலில் சிலை எதற்கு என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி,அந்த தொகையை மக்கள் நல திட்டத்திற்கு பயன்படுத்தலாம் என்று வலியுறுத்தியுள்ளார்.