கொரோனா தடுப்பூசி செலுத்தாவிட்டால் டிசம்பர் மாத ஊதியம் வழங்கப்படாது என்று மதுரை மண்டல மின்சார வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மதுரை மண்டலத்திற்கு உட்பட்ட அனைத்து மின் பகிர்மான வட்டங்களில் பணிபுரியும் அனைத்து பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் கொரோனா தடுப்பு மருந்து முதல் மற்றும் இரண்டாம் தவணையினை எதிர்வரும் டிசம்பர் 07 தேதிக்குள் செலுத்திக்கொள்ள வேண்டும் என மதுரை மண்டல மின்சார வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அவ்வாறு தடுப்பபூசி செலுத்திக் கொள்ளாத பணியாளர்கள் மற்றும் அலுவலர்களின் டிசம்பர் மாத ஊதியம் நிறுத்தம் செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
மேலும் மின் பகிர்மான வட்டங்களில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களும் தடுப்பு மருந்து செலுத்திக்கொண்டதற்கான விபர அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் மருத்துவ காரணங்களுக்காக தடுப்பூசி செலுத்தாத அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை உரிய மருத்துவ சான்றிதழ் பெற்று சமர்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தடுப்பு மருந்து செலுத்திக்கொள்ளாத பணியாளர்கள் மற்றும் அலுவலர்களின் டிசம்பர் மாத ஊதியம் நிறுத்தம் செய்யப்படும் என கடந்த நவம்பர் 26ல் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் வாரிய தலைவரால் அறிவுத்தல் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.