இஸ்ரேல் – ஈரான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில் தொழிலதிபர் ரத்தன் டாடாவின் மறைவிற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இரங்கல் தெரிவித்துள்ளார்.
உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நம் நாட்டில் மிக பெரிய ஆளுமையாக வலம் வந்த ரத்தன் டாடா தனது 86 ஆவது வயதில் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 9 ஆம் தேதி உயிரிழந்தார்.
பரம்பரை பணக்காரராக இருந்த போதிலும் அனைவரிடமும் எளிமையாக பழகி வந்த இவர் ஏழை எளிய மக்களுக்கு ஏரளமான் உதவிகளை செய்துள்ளார் . தனது சொத்துக்களின் மூலம் அதிகம் தொண்டு செய்து வந்ததன் காரணமாகவே இவர் உலக பணக்கார பட்டியலில் இடம் பிடிக்காமல் இருந்தார் . இருப்பினும் இவரால் பயனடைந்த ஏராளமான மக்களின் மனதில் நிறைந்த இடம் பிடித்துவிட்டார்.
Also Read : ரயிலில் சாகசம் செய்ய முயன்ற கல்லூரி மாணவனுக்கு நேர்ந்த சோக சம்பவம்..!!
இந்நிலையில் ரத்தன் டாடாவின் மறைவுக்கு பலரும் கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்த வரும் நிலையில் தற்போது இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பெஞ்சமின் நெதன்யாகு வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
இந்தியாவின் பெருமைமிகு மகனும், இரு நாடுகளுக்கும் இடையே நட்பின் சாம்பியனுமான ரத்தன் டாடாவின் மறைவிற்காக ஒட்டுமொத்த இஸ்ரேலும் துயரம் கொள்கிறது; ரத்தன் டாடாவின் குடும்பத்தினருக்கு எனது இரங்கல் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.