விக்ரம் லேண்டர் மற்றும் ரோவரிடமிருந்து எந்த சிக்னலும் கிடைக்கப் பெறவில்லை என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
சந்திரயான் 1:
கடந்த 2008ம் நிலவை ஆய்வு செய்வதற்காக ‘சந்திரயான் 1’ 386 கோடி ரூபாய் செலவில் இஸ்ரோ விண்ணில் செலுத்தியது.இந்த சந்திரயான் 1 விண்கலம் முதல் முறையாக நிலவில் நீர் இருப்பதற்கான தடயங்களை பூமிக்கு அனுப்பி வைத்தது.
‘சந்திரயான் 2’ :
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி தலத்தில்கடந்த ஜூலை மாதம் 14ஆம் தேதி நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய சந்திரயான்-3, விண்ணில் ஏவப்பட்டது.கிட்டத்தட்ட 40 நாள் பயணத்திற்கு பிறகு நிலவின் தென் துருவத்தில் நேற்று மாலை 6.04 மணிக்கு விக்ரம் லேண்டர் தரையிறங்கியது. பிறகு திட்டமிட்டபடி விக்ரம் லேண்டரிலிருந்து பிரக்யான் ரோவரும் நிலவில் கால் பதித்தது.
இந்த நிலையில், தரையிறங்கிய போது velocity கேமரா மூலம் விக்ரம் லேண்டர் எடுக்கப்பட்ட படங்களையும் இஸ்ரோ வெளியிட்டு,நிலவில் இந்தியா நடைபயணம் என நிலவில் ரோவர் நகருவதை குறிப்பிட்டு ட்வீட் செய்தது.
ரோவர் ஸ்லீப் முறை மாற்றம்:
சந்திரயான் 3 திட்டத்தின் முக்கிய கருவான பிரக்யான் ரோவர் அதன் பணிகளை வெற்றிகரமாக முடித்த நிலையில் நிலவில் சூரிய ஒளி மறைந்ததால் கடந்த 3 ஆம் தேதி ரோவர் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டு ஸ்லீப் முறைக்கு மாற்றப்பட்டது .
இதையடுத்து நிலவின் அடுத்த சூரிய உதயம் இன்று (செப் 22) நிகழ்வதை அடுத்து ரோவர் மற்றும் விக்ரம் லேண்டர் ஆகியவற்றை எழுப்பும் முயற்சியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .
சூரிய ஒளி பட்டதும் சோலார் பேனலின் மூலம் ஆற்றலை பெற்று, மீண்டும் ஆராய்ச்சியில் ஈடுபடும். நிலவின் தென் துருவத்தில் தொடர்ந்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டால் கூடுதல் தகவல்கள் கிடைக்கும் என தெரிவித்தது.
ரோவர் ,விக்ரம் லேண்டர் தொடர்பு:
விக்ரம் லேண்டர் இருக்கும் பகுதியில் சூரிய ஒளி மீண்டும் வந்த நிலையில், ரோவர் மற்றும் விக்ரம் லேண்டர் ஆகியவற்றுடன் தொடர்பை மீண்டும் ஏற்படுத்த இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ முயற்சிகளை மேற்கொண்டதில், இதுவரை எந்த சிக்னலும் கிடைக்கப் பெறவில்லை என்றும், அதனை தொடர்பு கொள்வதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் இஸ்ரோ தெரிவித்தது.எனினும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றும் கூறப்பட்டது.