‘ஜி.எஸ்.எல்.வி. எப்-12’ (gslv f 12) ராக்கெட் எரிபொருட்கள் நிரப்பப்பட்டு ஏவுதளத்தில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு உள்ளது.
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை (29.05.23) காலை வழிகாட்டி செயற்கைகோளை சுமந்தபடி விண்ணில் பாய்வதற்கு ‘ஜி.எஸ்.எல்.வி. எப்-12’ ராக்கெட் தயார் நிலையில் உள்ள நிலையில், அதற்கான 27½ மணி நேர ‘கவுண்ட்டவுன்’ இன்று தொடங்குகிறது.
சரியாக நாளை (29.05.23) காலை 10.42 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து, ‘ஜி.எஸ்.எல்.வி. எப்-12’ (gslv f 12) ராக்கெட் விண்ணில் ஏவப்பட இருக்கிறது.
2,232 கிலோ எடை கொண்ட ‘என்.வி.எஸ்.-01’ என்ற வழிகாட்டி செயற்கைகோளுடன் நிலைநிறுத்தப்படுகிறது.
இது, செயற்கைகோளை சரியான சுற்றுப்பாதைக்கு எடுத்துச்செல்லவும், அடுத்தடுத்த சுற்றுப்பாதையை உயர்த்தும் நடவடிக்கையும் எடுக்க உதவுகிறது.
மேலும், இது அடுத்த அடுத்த தலைமுறைக்கான என்.வி.எஸ். வரிசை செயற்கைகோள்களுக்காக மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் தகவல்களை தக்கவைத்து கொள்ளும்.
கூடுதலாக ‘எல்1 பேண்ட் சிக்னல்களை உள்ளடக்கிய இந்த செயற்கைகோளின் 27.30 மணி நேர ‘கவுண்ட்டவுன்’ இன்று காலை தொடங்கியது.
இந்நிலையில், ஏவுதளத்தில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு உள்ள ராக்கெட் மற்றும் செயற்கைகோளின் செயல்பாடுகளை கட்டுப்பாட்டு அறையில் இருந்து இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.